உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார்.
உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று புடின் கூறியுள்ளார். அங்கு வாழும் அனைத்து உயிர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்பும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.
அதாவது, தாயகம் திரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும். ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் உறுதியளித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…