தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன் – நாசர்.!

சார்பட்டா பரம்பரை கொடுத்ததற்காக இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு நசார் நன்றியை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். மேலும் கலையரசன், பசுபதி, ஷபீர், ஜான் கோக்கன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான இந்த படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் படம் அருமையாக உள்ளது என்று தங்களது கருத்துக்களை கூறிவருகின்றார்கள். அதைபோல் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் நாசர் ” தம்பி ரஞ்சித் நான் உன்னை பாராட்ட மாட்டேன். உன் கையை பிடித்து ஒரு நுறு முத்தம் கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன் இப்படி ஒரு படத்தை சமூகத்திற்கு கொடுத்ததுக்கு.” என்று பதிவிட்டுள்ளார்.
Nasser’s note to @beemji pic.twitter.com/aeEx0cLmoj
— Kameela (@nasser_kameela) July 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025