அசத்தலான புதிய சலுகையை அறிவித்த BSNL!!

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் (first recharge coupon) சலுகையை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் ரூ.45 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய சலுகை விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட 45 நாட்கள் வேலிடிட்டி நிறைவுற்றதும், பயனர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வேறு எந்த திட்டத்திற்கும் மாறலாம். ஆனால், முன்னரே குறிப்பிட்டபடி, இந்த எஃப்.ஆர்.சி ஆகஸ்ட் 6 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்படி விளம்பர அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.249 விலையில் பிரீபெயிட் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய அறிமுக சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும்.
BSNL ஒரு தரமான ப்ரீபெய்ட் ரூ.447 ரீசார்ஜை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 60 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 100 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வருகிறது. இதுவொரு நோ டெய்லி டேட்டா லிமிட் திட்டமாகும். எந்த விதமான தினசரி வரம்பு இருக்காது; 100ஜிபியை தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்தலாம், அல்லது ஒரே நாளில் கூட தீர்க்கலாம் என கூறியுள்ளது.
மொத்த டேட்டா முடிந்ததும், பி.எஸ்.என்.எல் 80 கே.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்கும். மேலும் அன் லிமிடெட் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்கும். 60 நாட்கள் வேலிடிட்டி என்ற இந்த திட்டத்தை CTOPUP மற்றும் வெப் போர்டல் வழியாக ரீசார்ஜ் செய்யலாம்.
இதுதவிர ஜூலை 31ம் தேதி வரை இலவச சிம் சலுகையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025