கனி பிக் பாஸ் சீசன் 5-வில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் . உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.
அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அவ்வப்போது, சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் பரவி வருவது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில், பிரியங்கா, மிலா, பவானி ரெட்டி, இமான் அண்ணாச்சி, போன்ற பலரது பெயர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனி பிக் பாஸ் சீசன் 5-வில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…