வானத்தில் இருந்து கீழே விழுந்த பூனை.! தலையில் மோதி மயக்கமடைந்த மனிதர்.!

பூனை ஒன்று வானத்தில் இருந்து விழுந்து மனிதனின் தலையில் மோதி அவர் மயக்கமடையும் வினோதமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடகிழக்கு சீன மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகரில் காவ் ஃபெங்குவா என்ற மனிதர் பின்னால் நடக்க அவரது வீட்டு நாயான ரெட்ரீவர் சிறு அடிகள் முன்னால் நடைப்பாதையில் நடந்து செல்கிறது. அப்போது வானத்தில் இருந்து அதாவது மேலிருந்து பூனை ஒன்று அந்த மனிதரின் தலையில் விழ அவர் மயங்கி விழுகிறார். கீழே பலமாக விழுந்த பூனை மெதுவாக வேறு இடத்திற்கு செல்ல முன்னால் நடந்து சென்ற நாய் தனது எஜமான் மயங்கி விழுந்ததை கண்டு திரும்பி வருகிறது.
அதனையடுத்து சற்று விலகி நிற்கும் பூனையிடம் செல்லும் நாய் அதனுடன் விளையாடுகிறது. இந்த நிகழ்வில் பூனை அப்பார்ட்மென்ட் பால்கனியில் இருந்து விழுந்ததாகவும், மயங்கி விழுந்த மனிதரின் பக்கத்து வீட்டு உள்ளவர்களின் பூனை என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025