நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணியில் உருவாகும் “விருமன்” படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், இயக்குனர் ஷங்கர், இயக்குனர் பாலா, இயக்குனர் முத்தையா, சூர்யா, கார்த்தி, யுவன் ஷங்கர் ராஜா, சிவகுமார், ஷங்கரின் மகள் அதிதி ஆகியோர் கலந்துகொண்டனர். அதற்கான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…