ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்த சீனா..!

Published by
murugan

ஆப்கானிஸ்தானுக்கு 31 மில்லியன் அமெரிக்க டாலர்களை அறிவித்த சீனா 

காபூலைக் கைப்பற்றிய 22 நாட்களுக்குப் பிறகு தலிபான்கள் தங்கள் அரசாங்கத்தை அறிவித்தனர். ஆப்கானிஸ்தானில் புதிய பிரதமராக தலிபான் இயக்கத்தின் தலைவர் முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். துணைத் தலைவராக முல்லா அப்துல் கனி பரதார் மற்றும் முல்லா அப்துல் சலாம் இருப்பார்கள் என்று தலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் சீனா மற்றும் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தலிபான் அரசுக்கு ஆதரவாக சீனா தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானுக்கு ஒரு பெரிய உதவியை சீனா அறிவித்துள்ளது. அதன்படி, உணவு தானியங்கள், குளிர்கால பொருட்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி உட்பட ஆப்கானிஸ்தானுக்கு 200 மில்லியன் யுவான் (அமெரிக்க டாலர் 31 மில்லியன்) உதவி வழங்குவதாக சீனா நேற்று அறிவித்தது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆக்கிரமிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகுவதாக அறிவித்த பிறகு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஆப்கானிஸ்தான் தலிபான் அரசியல் ஆணையத்தின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதரை சந்தித்தார். அதன்பிறகு, சீனா தலிபான்களுடன் நெருங்கத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கு சீனா வழங்கும் முதல் உதவி இது என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஒழுங்கை மீட்க தலிபான்கள் முயற்சிக்க வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது. மறுபுறம் தலிபான்களுக்கு ஒரு பெரிய நாட்டின் ஆதரவு தேவை. இதனால், சீன வெளியுறவு அமைச்சர்களுடன் தலிபான் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைவதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று சீனா கூறியது.

Published by
murugan

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

25 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

1 hour ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago