திருட வந்த இடத்தில் வசமாக சிக்கிக்கொண்ட திருடன்.. ஏடிஎம் சிறையாக மாறிய ருசீகர சம்பவம்…

- நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில் தான் நடந்துள்ளது இந்த வினோதமான கொள்ளை முயற்சி.
- இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், ஏடிஎம் அறைக்குள் ஒரு நபர் நுழைகிறார். அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும் வேளையில் கதவு தானாக சாத்திக் கொள்கிறது. இதையடுத்து அங்கு உள்ள எச்சரிக்கை மணி சப்தமாக ஒலிக்கிறது. இதனால் பதட்டம் அடையும் அந்த நபர் கீழே இருக்கும் ஒரு தகரத்தை எடுத்து கதவை உடைக்க முயற்சி செய்கிறார். பின்னர் அதே தகரத்தை வைத்து ஏடிஎம் எந்திரத்தையும் உடைக்க பார்க்கிறார்.
அதுவும் நடக்காததால் வெறுத்து அந்த ஏடிஎம்க்குள்ளேயே அப்படியே சிக்கிக்கொண்டார். பின், ஷாங்காய் நகர காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த ஏடிஏம்க்குள் சிக்கிக்கொண்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025