விக்ரமின் 60 வது படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கி இந்த படத்தை அடுத்த ஆண்டு மே அல்லது ஏப்ரல் மாதம் வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா” இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் விக்ரமின் 60 வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார் என்றும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பார் என்றும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கி இந்த படத்தை படக்குழு அடுத்த ஆண்டு மே அல்லது ஏப்ரல் மாதம் வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என்பதை குறித்த அப்டேட் ஒன்றும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…