ஜப்பான் கப்பலில் 150 பேருக்கு மேல் கொரோனா உறுதி!

அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த ஜப்பான் கார்னிவல் குரூஸ் கப்பலில் இதுவரை 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸை அழிக்க, உலக நாடுகள் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை உலக அளவில், 2,833,903 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 197,359 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த ஜப்பான் கார்னிவல் குரூஸ் கப்பலில் இதுவரை 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த கப்பலில் ஏப்ரல் 23 தேதி வரை 290 பேருக்கு சோதனை செய்ததில், 60 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனை தொடர்ந்து செய்யப்பட்ட சோதனையில், 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025