அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அடங்கும்.சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மேலும் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 10 நாட்களில் தன்னுடன் நெருக்கமாக இருந்து அனைவரும் தங்களை கொரோனா தொற்றுக்கான பரிசோதனையை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது .
அதனையடுத்து அமிதாப் பச்சன் அவர்களின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது பக்கத்தில் கூறியதாவது, நானும், எனது தந்தையும் சேர்ந்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்ததாகவும், லேசான அறிகுறிகளுடன் தான் நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம் என்றும், தேவையான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதனையடுத்து மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று வருவதாகவும், அதுவரை அவர்கள் வீட்டினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…