பாகிஸ்தானில் 24 மணி நேரத்தில் 1,932 பேருக்கு கொரோனா.!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000,295 ஆகவும், உயிரிழந்ததோர் எண்ணிக்கை 325,151 உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக உலகளவில் இதுவரை 1,970,911 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், நமது அண்டை நாடான பாகிஸ்தானில், இதுவரை கொரோனாவால் 45,898 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 985 ஆக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025