இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று….! உதவி கரம் நீட்டும் பிரான்ஸ்…!

இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்ஸிஜன் சுவாச உபகரணங்களை, இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் ஒரு பக்கமிருக்க, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செய்தி வேதனையை அளிப்பதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க நாட்டிற்கு உதவுவதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்ஸிஜன் சுவாச உபகரணங்களை, இந்தியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோனி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய ஆணையம், கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றை, இந்தியாவிற்கு வழங்கி உதவுவதற்காக உறுப்பு நாடுகளை, ஐரோப்பிய நாடுகளின் அவசர மேலாண்மை ஒருங்கிணைப்பு மையம் ஒருங்கிணைத்து வருகிறது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025