இங்கிலாந்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 383 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,991 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,875 ஆக அதிகரித்து உள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 344 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 917 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…