கொரோனா பிறப்பிடமாக கூறப்படும் சீனாவில் உள்ள உகானில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்வை விட அதிகமான சர்க்கரை அளவு இருந்தால் தான் அதிக உயிரிழப்பு நடப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உகான்நகரில் உள்ள அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழக யூனியன் மருத்துவமனை மற்றும் டோங்கி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யிங் ஜின் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகளை டயாபெடாலாஜியா என்ற இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், இந்த ஆய்வுக்காக உயிழந்த 114 கொரோனா நோயாளிகள் உட்பட 605 கொரோனா நோயாளிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இதில் 34 % பேர் அதாவது 208 நோயாளிகளுக்கு ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருப்பது தெரியவந்தது. 29 % நோயாளிகளுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 17 % நோயாளிகள் சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளில் இருந்தனர்.
ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தாலும் சரி , நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் சரி, அல்லது நோய்கணிக்கப்படாத ஆனால் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பவர்களாக இருந்தாலும் சரி கொரோனா நோய் ஏற்பட்டதால் தான் உயிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
எனவே கொரோனா நோயாளிகளுக்கு நீரிழிவு உள்ளதா..? ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதாக என பரிசோதனை செய்ய அவசியம் என்று இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…