நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிற்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறிய வதந்திகளுக்கு கியூட்டான வீடியோவை வெளியிட்டு பதிலளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும் காதலான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும்,, அதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குழந்தை போல மாறி கியூட்டான ரியாக்ஷன் செய்யும் அழகான வீடியோவை வெளியிட்டு, அதனுடன் எங்களைப் பற்றிய செய்திகளை இப்படித் தான் பார்க்கிறோம். கொரோனா வைரஸ் மற்றும் நாங்கள் இறந்தது போல் புகைப்படங்கள் டிசைன் செய்த உங்களையும் அப்படித் தான் பார்க்கிறோம்., நாங்கள் உயிருடன் இருக்கிறோம், ஆரோக்கியமாக இருக்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் உங்களது அனைவரின் கற்பனையையும், உங்கள் வேடிக்கையான நகைச்சுவையையும் காண கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். வதந்திகளை பரப்பியவர்களுக்கு சரியான பதிலடியை கியூட்டாக கொடுத்த அவர்களது வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…