கொரோனாவின் கோர முகம் – உலகளவில் உயிரிழப்பு தெரியுமா.?

சீனாவில் ஆரம்பித்திருந்தாலும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தற்பொழுது மிகவும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் உலகளவில் கொரோனா வைரஸால் 2,083,607 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 134,632 பேர் உயிரிழந்துள்ளனர். 510,666 பேர் குணமாகியுமுள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் அதிகம் தாக்கப்பட்டது வளர்ந்த நாடாகிய அமெரிக்கா தான்.இதுவரை அமெரிக்காவில் 6,44,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 28,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு சதவிகிதம் மட்டும் 4.42 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய பல நாடுகளில் கொரோனா கோரமுகத்தை காட்டிவிட்டது.
அந்தந்த நாட்டு மக்கள் தொகை வீதத்தின் படி, இத்தாலியில் இதுவரை 13.10 சதவீதமும்,ஸ்பெயினில் 10.47 சதவீதமும், பிரான்சில் 11.61 சதவீதமும், பிரிட்டனில் 12.68 சதவீதமும் உயிரிழப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள 2,083,607 பேரில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. ஆனால், அதையும் மீறி பல நாடுகளிலும் பரவி தான் வருகிறது. இந்தியாவில் இதுவரை 12,456 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 422 உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1,513 இதுவரை குணமாகியுள்ளனர்.