கொரோனாவின் கோரதாண்டவத்தால் கொத்து கொத்தாக செத்து மடியும் மனித உயிர்கள்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்குகிறது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், உலக அளவில், இந்த வைரஸால் அதிகமாக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இங்கு இந்த கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் செத்து மடிகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,484,285 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 88,507 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று மட்டும் அமெரிக்காவில், 1595 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.