விஜய் சேதுபதியின் படத்தை குறித்து கூறிய நடிகர் சௌந்தர்ராஜா.!

விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். குணச்சித்திர நடிகரான பெரிய கருப்புத்தேவர் அவர்களின் மகனான விருமாண்டி இயக்கும் இந்தப் படத்தில் வேலராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையமைப்பாளராக பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டதாகவும், அறம் படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக க/பெ ரணசிங்கம் இருக்கும் என்றும், அதில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன் என்றும், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்றும் கூறி டுவிட் ஒன்றை பகிர்ந்திருந்தார்
இந்த நிலையில் தற்போது அந்த டுவிட்டுக்கு நடிகர் சௌந்தர்ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ரணசிங்கம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம். இந்தப் படத்திற்காக காத்திருப்பதாகவும், இந்த படத்தின் வெற்றிக்காக எனது முன்கூட்டியே வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது நண்பர்களான விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை குறித்து சொல்லவே தேவையில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த படம் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“#ரணசிங்கம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் – இசையமைப்பாளர் #ஜிப்ரான்.Congratulations #virumandi mama director of the #Ranasingam film. Waiting for the movie.Advance wishes for the grand success. Offcourse my lovable friends @VijaySethuOffl & @aishu_dil சொல்லவே தேவையில்லை ???? https://t.co/MyblqE3SFy
— Soundara Raja Actor (@soundar4uall) May 13, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025