எனக்கு கொரோனா வைரஸ்-ங்க…ஐய்யயோ..பீதியாகி ஓட்டம் பிடித்த மக்கள்..பயந்துட்டீங்களா..சும்மா..!ஏமாற்றிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை..!

Published by
kavitha

அண்டை நாடான சீனாவை கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து கொரோனா என்ற பெயர் கொண்ட வைரஸ் அச்சிறுத்தி வருகிறது.அங்குள்ள மக்கள் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டு கொத்துகொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25க்கும் அதிகமான நாடுகளில் இந்நோய் பரவி உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

Image result for corona virus

இந்த கொடூர கொரோனா வைரசுக்கு இதுவரை மட்டும் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்து 640 பேருக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்து அடையாளம் கண்ட மருத்துவரும் தற்போது இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் உலக நாடுகள் எல்லாம் கடும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் இதனை எதிர்கொண்டு வருகிறது.

இவ்வாறு நாடே பரப்பராக இருக்கும் சமயத்தில் ரஷிய நாட்டில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதளபக்கத்தில் அதிக ‘லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறி உள்ளார். முகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு அந்த ரெயிலில் பயணம் செய்துள்ள  டஸ்புரோவின் நடவடிக்கைகளை எல்லாம் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளார்.

அங்கிருந்து ரெயில் புறப்பட்டது.புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலில் பயணிகள் அதிகமாக இருந்த இடத்தை நோக்கி வந்த அந்த  திடீரென மயங்கி பொத்தென்று விழுந்து வலிப்பு வருவது போல நடித்து உள்ளார். அங்கிருந்த அவருடைய நண்பர்கள் பயணம் செய்யும் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ‘கொரோனா, கொரோனா வைரஸ்’ என்று கூச்சலிட்டு கதறி உள்ளனர்.
என்னது கொரோனா கொடூரனா என்று அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்களுக்கும் வைரஸ் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் பீதியாகி  ரெயில் அடுத்த நிலையத்தை எப்பொழுது அடையும் என்று காத்து கொண்டிருந்த அவர்கள் அடுத்த நிலையத்தை ரெயில் அடைந்த உடன் அலறிடித்துக்கொண்டு ரெயிலை காலி செய்து வேகமாக ஓட்டம் பிடித்தனர்.ஆனால் இது ஒரு ‘பிராங் வீடியோ’ என்று கடைசியில் தெரியவரவே பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில் டஸ்புரோவ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர் போல நடித்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இந்த வீடியோ அந்நாட்டு போலீசார் பார்வையில் சிக்கவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்பத்துதல், பயணிகளுக்கு தொல்லை கொடுத்தல் போன்ற அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து டஸ்புரோவை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர் நீதிமன்றட்த்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை வரும் வரை டஸ்புரோவை ஒரு மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்நிலையில் போலீசார் பதிவு செய்துள்ள குற்றப்பிரிவுகளில் அடிப்படையில் பயணிகளை பீதியடைய வைத்தற்காகவும் புரளியாக நடித்தர்காகவும் டஸ்புரோவுக்கு அதிகபட்ச சிறை தண்டனையாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

.

Recent Posts

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

26 minutes ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

3 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

3 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

5 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

5 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago