காதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

காதலை சோதிக்க 123 நாட்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கைகளுடன் இருந்த ஜோடிகள் இறுதியில் பிரிந்து சென்றனர்.
உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரை சேர்ந்த புஸ்டோவிடோவாவும் (29 வயது), அலெக்ஸாண்டர் குட்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காதலை சோதனை செய்வதற்காக, காதலர் தினத்தன்று தங்களிருவருடைய கைகளை, ஒரே இரும்பு சங்கிலியால் இருவரும் கட்டிக்கொண்டனர். இவர்கள் இருவரும் சுமார் 123 நாட்கள் கட்டப்பட்ட கைகளுடன் இருந்துள்ளனர்.
இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒரே இடத்தில் இருப்பதும் 24 மணி நேரமும் ஒருவரையொருவர் ஒருபோதும் பிரிய கூடாது என் கையில் வாழ்ந்து வந்துள்ளனர். நாட்கள் செல்லச் செல்ல காதல் கசந்து, இதற்கு மேல் முடியாது என்ற நிலையில், கையில் போட்டிருந்த இரும்பு சங்கிலியை அவிழ்த்துள்ளனர்.
சங்கிலிகள் துண்டிக்கப்பட்ட பின், இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். இவர்கள் தங்களது இன்ஸ்டா, பக்கத்தில் நாங்கள் செய்ததை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம். மற்ற தம்பதிகளுக்கு இது ஒரு நல்ல படமாக இருக்கும் என நினைக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025