தர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை! வனிதா விஜயகுமார் அதிரடி!

தர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை.
கடந்த சில வாரங்களாகவே தர்சன் மற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பிரிவு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான வனிதா விஜயகுமார் இதுகுறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சனம் ஷெட்டி பிகினி உடை அணிந்ததாலும் சனம் ஷெட்டி தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது அவரது முன்னாள் காதலருடன் நெருங்கி இருந்ததாகவும் காரணங்கள் பல கூறினார். பிரிவதற்காக இவன் என்ன காரணங்கள் வேண்டுமானாலும் கூறுவான்.
அப்படிப் பார்க்கப் போனால் தர்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் என்னவெல்லாம் செய்தான் என்று நான் சொல்லவா? தான் சரியாக இருந்து விட்டு பிறகு மற்றவர்களை சுட்டிக்காட்டும் பொழுது எந்த ஒரு தவறும் இல்லை.
இவனே அந்த வீட்டுக்குள் இருந்து தவறுதான் செய்தான், அதை நாங்கள் சுட்டிக்காட்டும்போது எங்களை தவறாக எண்ணினார்கள். எனவே தர்ஷனுக்கு சனம் ஷெட்டியின் குணத்தைப் பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லை என காட்டமாக கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025