மார்கழி மாதம் என்றாலே சிரப்பு தான். இந்த மாதத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுவது வழக்கம்.
இந்த மாதத்தில் உங்கள் வாழ்வு வசந்தம் பெருக இந்த திரூப்பள்ளி எழுச்சியை தினமும் துதிக்களாம்.
போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற் கினைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
ஏழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
ஏற்றுயர் கொடியுடை யாய்! எமை உடையாய்!
எம்பெரு மான்!பள்ளி எழுந்தருளாயே!
இந்த பதிகத்தை திரோதான சுத்தியில் பாடலாம்.
பாடல் விளக்கம்;
என் வாழ்விற்கு மூலப்பொருளே வணக்கம்!, சேற்றில் நின்று தாமரைகள் இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த சிவபெருமானே! உயர்த்திய எருதுக்கொடி யுடையவனே! என்னை அடிமையாக உடையவனே! எம்பேருமானே! வணக்கம். பொழுது விடிந்தது. உன் அழகிய திருவடிகள் இரண்டுக்கும் ஒன்றற் கொண்டு ஒத்த மலர் கொண்டு தூவினோம்; எங்களுக்கு அருள்புரியும் பொருட்டு உன் திருமகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி, உன்னுடைய திருவடியை வணங்குகின்றோம். பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…