நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி கைவிடப்பட்ட படத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ். அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி இந்தி மற்றும் ஹோலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தற்போது Atrangi Re என்னும் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு புறம் இருக்க தயாரிப்பாளராகவும் , பாடகராகவும், பாடலாசிரியராகவும் கலக்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு ‘பா. பாண்டி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கி வரவேற்பைப் பெற்றார்.
அதனையடுத்து அவர் இயக்கிய சரித்திர படம் தான் ‘நான் ருத்ரன்’. இந்த படத்தில் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, சரத்குமார், அதிதி ராவ், அனு இம்மானுவேல், எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க இருந்தார்கள். சில நாட்கள் படப்பிடிப்புகள் நடந்த இந்த படம் சில பொருளாதார பிரச்சினை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் தனுஷ் இந்த படத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…