உங்க சகவாசமே வேண்டாம்.! தெலுங்கு பக்கம் தஞ்சமடைந்த வெங்கட் பிரபு.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. அடுத்ததாக இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனை வைத்து “மன்மதலீலை” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அது என்னவென்றால், வெங்கட் பிரபு அடுத்ததாக தமிழில் பெரிய நடிகர்களுக்கு கதைகூறமால், இயக்குனர் ஷங்கர், லிங்குசாமி போல, தெலுங்கு ஹீரோக்கு கதை கூறியுள்ளார். மேலும் இது, மாநாடு திரைப்படத்தின் ரீமேக் கிடையாதாம். புது கதையாம் எனவும், 1980-களில் நடக்கும் கதையாம்.
மேலும், இந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யாவும், ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025