பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல்.. 9 பேர் உயிரிழப்பு, 17 பேர் படுகாயம்.!

பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் உள்ள சலு மாகாணத்தின் தலைநகரான ஜோலோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். முதலில் ஜோலோவில் உள்ள மளிகை கடை ஒன்றின் முன்பு நண்பகல் 12 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனையடுத்து அங்கிருந்து 70 மீட்டர் தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றின் முன்பு முதல் வெடிகுண்டு வெடித்த ஒரு மணி நேரம் கழித்து இரண்டாவது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது , மேலும் இதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வெளிப்படுத்துகிறது. பிலிப்பைன்ஸில் நடந்த இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.