பருவமழை – நாளை சென்னையில் முதல் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெறு வரும் நிலையில், நாளை சென்னையில் முதல் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி தொடங்கப்படவுள்ளது.
சென்னையில் நாளை முதல் செப். 2ம் தேதி வரை கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி நடைபெறவுள்ளது. அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் கழிவுநீர் குழாய்கள், இயந்திர நுழைவு வாயில்களில் கசடுகள் அகற்றப்பட உள்ளன; 720 தெருக்களில் உள்ள 5,277 இயந்திர நுழைவு வாயில்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது.