ஊரடங்கு காலகட்டத்தில் ஆணுறை விற்பனை வீழ்ச்சியடைந்ததால், பாலியல் செயல்பாடுகள் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலநாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், வணிக வளாகங்கள், தொழிசாலைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், டூரெக்ஸ் ஆணுறை நிறுவன அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன் கூறுகையில், மார்ச் மாதத்தில் இங்கிலாந்து உட்பட பெரும்பாலான சந்தைகளில் ஆணுறை விற்பனை வீழ்ச்சியடைந்ததால், பாலியல் செயல்பாடுகள் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், தொழிசாலைகள் முடியதால் ஆணுறை பற்றாக்குறை அதிக அளவில் அதிகரித்துள்ளது என ஒரு தரப்பில் கூறபடுகிறது. உலகம் முழுவதும் ஆணுறைகளில் பாதி அளவு உற்பத்தி செய்யும் நாடாக மலேசியா உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மலேசியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆணுறை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
இதனால், உலகளவில் ஆணுறை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு வாரங்கள் மட்டுமின்றி அடுத்த ஒரு மாதம் வரையில் இந்தப் பற்றாக்குறை நீடிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால், ஐநா மக்கள் நிதி மற்றும் கூட்டமைப்பு கூறுகையில், ஊரடங்கு அமல்படுத்தி உள்ளதால் இதன் காரணமாக வரும் மாதங்களில் உலகம் முழுவதும் திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், வரும் மாதங்களில் தேவையில்லாமல் உலகம் முழுவதும் பல லட்சம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் சூழல் உள்ளது என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…