உலக பணக்காரர் பட்டியலில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், இரண்டாம் இடத்தில் உள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், பணக்கார பட்டியலில் கடந்த மாதம் 3 ஆம் இடத்தில் இருந்தார். இவரின் இரண்டு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்த காரணமாக அவரின் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே வந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் அவரின் சொத்து மதிப்பு 27.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், டெஸ்லாவின் 689% வருமானம், அவருக்கு உயர்வை தந்தது. அதுமட்டுமின்றி எலான் மஸ்க், 2020 ஆம் ஆண்டுவரை 167 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர் வலைத்தளம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, 192 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 167 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க், மூன்றாம் இடத்தில் 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், நான்காம் இடத்தில் 115 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பேர்னால்டு அர்னால்ட், அவரை தொடர்ந்து, 103 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…