12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழுஅனுமதி..!

12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பல நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மே மாதம் 12 முதல் 15 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 12 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’18 வயதுக்கு மேலானவர்களுக்கு போடப்படும் ஸ்பைக்வாக்ஸ் தடுப்பூசி 12 முதல் 17 வயதிலான குழந்தைகளுக்கு போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதிலான 3,732 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது வெளியாகும் அதே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடமும் காணப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025