சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!

சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தெற்கு நகரமான டோங்குவானில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் டெக்னாலஜிஸுக்கு சொந்தமான ஒரு நிலையத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அருகில் இருந்த இந்த கட்டிடம் எஃகு அமைப்பாக இருந்தது. அந்த கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும் ஆனால், சம்பவம் நடந்தபோது அந்த கட்டிடத்தை பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழில்துறை நகரமான டோங்குவானில், அலிஷன் சாலையில் இன்னும் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தில் தொடங்கிய தீ விபத்தில் எந்த விதமான சேதங்களும் ஏற்படவில்லை என அந்த நகர அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையில், தீ விபத்து காரணம் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
BREAKING – Huawei’s research lab in Dongguan City, China is on fire.pic.twitter.com/q9T9irtYyS
— Disclose.tv ???? (@disclosetv) September 25, 2020