1979 ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள புனாஹூ பள்ளியில் கூடைப்பந்து போட்டியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அணிந்திருந்த ஜெர்சி கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்த ஏலத்தில் 192,000 டாலர் அதாவது ஒரு கோடியே 41 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த ஏலம் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி ஏலங்களுக்கு புதிய உலக சாதனை படைத்தது. ஒபாமாவின் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி முந்தைய உலக சாதனையை முறியடித்ததாக ஏல நிறுவனமான ஜூலியன் ஏலம் ட்வீட் செய்துள்ளது. உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சிக்கான முந்தைய சாதனை 187,500 க்கும் அதிகமாக விற்கப்பட்டது. அதாவது ஒரு கோடியே 38 லட்சமாக இருந்தது.
ஒபாமா அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக இருந்தார். 20 ஜனவரி 2009 அன்று பதவியேற்றார். அவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருந்தார். ஒபாமா 1991 இல் ஹார்வர்ட் பள்ளியில் பட்டம் பெற்றார். உலக அமைதிக்கு சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக ஒபாமாவுக்கு 2009 அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…