கொரோனாவை ஒழிச்சாச்சி! கொரோனா வார்டுக்கு பூட்டு போட்டு கொண்டாடிய மருத்துவர்கள்!

நியூசிலாந்தில் கடைசி நோயாளி குணமடைந்து வீடுதிரும்பியதையடுத்து, மருத்துவர்கள் கொண்டாட்டம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இதுவரை உலக அளவில் 7,732,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 428,248 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நியூசிலாந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளி குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை பூட்டு போட்டுவிட்டு மருத்துவர்கள் கைதட்டி கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.