ஹைதி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 1,941 ஆக உயர்வு!

ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 1,941 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹைதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியது.
இப்பகுதியில் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக 1,941 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 60 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் இந்த நிலநடுக்கத்தால் சேதமடைந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025