ஐபோனில் எடுக்கப்பட்ட ஆண்ட்ரியாவின் 'லாக்டவுன்' குறும்படம் இதோ..!

நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கும் இந்த குறும்படத்திற்கு “லாக்டவுன்” என்று பெயரிடப்பட்டுள்ளது ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் ஐபோனில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.
நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கும் இந்த குறும்படத்திற்கு “லாக்டவுன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நிதின்ராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படம் 4மணி நேரத்திற்குள் ஐபோனால் மட்டும் எடுக்கப்பட்ட குறும்படமாகும். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த குறும்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025