கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல் வதந்தி என்று நயன்தாரா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.இந்த திரைப்படம்குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.இது அவர்களது கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமென்பதும் ,அதனை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
சமீபத்தில் கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.தற்போது நயன்தாரா தரப்பிலிருந்து இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர் .அதாவது கௌதம் மேனன்-சிம்பு படத்தில் நடிக்க கோரி இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், அந்த தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதிவிருந்து சிம்புவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.ஏற்கனவே நயன்தாரா வல்லவன்,இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் சிம்புவுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது .
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…