இந்திவாவில் முதல் அறிவியலாளர் என்ற சிறப்பை பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஆவர்,இவர் ஜனவரி 24ம் நாள், 1922ம் ஆண்டு பிறந்தார். அத்தகய காலங்களில் பெண்களுக்க கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த காலத்தில் கல்வி கற்று இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என்ற நிலையை அடைந்தவர் ஆவர். இவர் சிறப்பாக கல்வி கற்று நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் ஒரு சிறந்த முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் மின் பொறியியல் துறையில் முதுகலை பட்டத்தை பெற்றார் .
தனது கல்வியை முடித்துவிட்டு இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியராக உயர்வு பெற்றார். பின் இவர் அந்த கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சிறந்த ஆய்வுக்கட்டூரைக்காக மவுண்ட்பேட்டன் பரிசு (இங்கிலாந்து) மின் மற்றும் வானொலி பொறியியல் கழகம் வழங்கியது. ஜேகதிஸ் சந்திர போஸ் நினைவு பரிசை சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்காக பொறியாளர்கள் நிறுவனத்தின் மூலம் வழங்கபட்டது. ராம்லால் வாத்வா விருது சிறந்த ஆராய்ச்சி மற்றும் விரிவுரையின் மூலம் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடின கல்வி போராட்டம் நடத்தி சிறந்த நிலையை அடைந்த இவர் செப்டெம்பர் மாதம் 3ம் நாள் .2010ம் ஆண்டு தனது 88வது வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…