வரலாற்றில் இன்று(22.12.2019)- தேசிய கணித தினம்

Published by
Kaliraj

“எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.”

என்பது கணிதத்தை பற்றிய வள்ளுவன் வாக்கு. அப்படிப்பட்ட கணிதத்தை நாம் சிந்தையில் வைத்து போற்ற வேண்டும். இந்தியாவில் இத்தகய கணித்தை ஒரு கணிதமேதையின் பிறந்த நாளினை இந்தியாவே  தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறது. இதை பற்றியது தான் இன்றைய தொகுப்பு.

பிறப்பு:

ஈரோடு மாவட்டத்தில்    சீனிவாசன்  கோமளம் தம்பதிகளுக்கு  1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  திங்கள் கிழமை 22 ஆம் நாள் பிறந்தவர் தான் இந்தியா இல்லை உலக கணித மேதை இராமானுஜம். இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி:

இராமானுஜரின் தாத்தா வேலைபார்த்த கடை காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு வந்தது. 1892ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில் இராமானுஜர் தொடக்கக் கல்வியைத்  தொடங்கினார். 1894 ஆம் ஆண்டில், அவர் திடீரென்று தெலுங்கு வழி கல்விக்கு மாற்றப்பட்ட சில நாள்களிலேயே அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு  கல்யாணம் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து மீண்டும்  கல்வி கற்றார்.

Related image

பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித திறமையும், நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் வெற்றி பெற்றதால் அவனுக்கு கும்பகோணம் நகர  மேல்நிலைப் பள்ளியில் பாதி கல்வி உதவி தொகை என்ற  சலுகை கிடைத்தது.தனக்கு  12வது வயது இருக்கும் போது,  லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு அண்ணனிடமிருந்து இரவல் வாங்கி படிக்கத் தொடங்கினான். தன்னைவிட 7 முதல்  8 வயது சிறியவனான இந்த சிறுவன் இந்த கல்லூரிப் பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு முடித்து விட்டான் என்றதும், அந்தக் கல்லூரி மாணவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. முக்கோணவியல் என்ற பெயரில் அந்த புத்தகம்  இருந்தாலும் அப்புத்தகத்தில் சில உயர் கணித செய்திகளான, பகுவியலில் (Analysis) கூறப்படும் தொடர் வினை (Continuous processes) களைப் பற்றிய கணிதம், அடுக்குக்குறிச் சார்பு (exponential function), கலப்பு மாறியின் மடக்கை (logarithm of a complex variable), மிகைபரவளைவுச் சார்புகள் (hyperbolic functions) முடிவிலாத் தொடர்கள் மற்றும் பெருக்கீடுகள் (infinite series and products)  போன்றவைகளாகும்.

இதைப்போன்ற கணிதத்தின் உயர்தர தரவுகள் எல்லாம் பாடத்திற்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தன. இவைகளைப் பற்றி அப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது துல்லியக் குறைவாக இருந்தாலும் அப்புத்தகம் தான் சிறுவன் இராமானுஜனுக்கும் இந்த கணிதப் பொருள்களுக்கும் ஏற்பட்ட முதல் நட்பு என்றே கூறலாம். இதைவிட ஒரு சிறந்த  புத்தகம் அவன் கையில் கிடைக்காதது விதியின் விளையாட்டு போலும். பின் தனது கல்லூரி கல்வியை கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியில் சிறந்த மாணவராக கற்றுத் தேர்ந்தார்.

இவரின் சாதனைகள்:

இவர் 1914ம் ஆண்டு  முதல் 1918  வரை உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழமான  உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ராமானுஜரின்  ஆய்வுகளில் “தியரி ஆஃப் ஈகுவேசன்ஸ்”, “தியரி ஆஃப் நம்பர்ஸ்”, “டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ்”, “தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்”, “எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கண்டினியூடு ஃப்ராக்சன்ஸ்” எனும் நிலைப்பாடுகள் மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

இறப்பு:  

இத்தகைய சிறப்பு மிகுந்த இவர்  ஏப்ரல் மாதம் 26ம் நாள்  1920ம் ஆண்டு தனது அகவை 32
சேத்துப்பட்டு சென்னையில் இயற்கையின் நியதியின் காரணமாக மரணம் அடைந்தார். இவரது சிறப்புகளை உலகமும் இந்தியர்களும் அறிய இவரது பிறந்தநாளை இந்திய அரசு தேசிய கணித தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

 

Published by
Kaliraj

Recent Posts

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

52 minutes ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

1 hour ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

4 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

4 hours ago

பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனு! உச்சநீதிமன்றம் காட்டம்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…

5 hours ago

ப்ளீஸ் பாலோவ் பண்ணாதீங்க…விஜய் வைத்த வேண்டுகோளை மீறும் த.வெ.க தொண்டர்கள்!

மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

5 hours ago