ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாத சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான கொள்கை கொண்ட அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தின இன்று.
இவர், 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் நாள் சென்னையின் ஆயிரம் விளக்கு பகுதியில் நல்ல கல்விப் பின்புலம் கொண்ட தலித் குடும்பத்தில் பிறந்தார் அயோத்திதாசர். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் காத்தவராயன். இவரது தாத்தா கந்தப்பன் ஜார்ஜ் ஹாரிங்டன் எனும் ஆங்கிலேயரிடம் பணிபுரிந்தவர் ஆவர், இவர் தன்னிடம் சேகரிப்பில் இருந்த திருக்குறள் படிகளை எல்லிஸ் துரையிடம் வழங்கியவர் கந்தப்பன். நீலகிரிக்குக் குடிபெயர்ந்த அயோத்திதாசர், தோடர் இன மக்களை ஒன்றிணைத்து ‘அத்வைதானந்த சபை’ எனும் அமைப்பை உருவாக்கினார்.
தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு தலித் மக்கள் ஆளாவதைக் கடுமையாக எதிர்த்தார். எனவே இந்து மதம் தலித் மக்களைச் சாதிய ரீதியாக ஒடுக்குவதாகக் கருதிய அவர், இந்து மதத்தைத் தாண்டி தலித் மக்களை அடையாளப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். ஆதித் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று முதலில் கூறியவர் அவரே. பின் நாட்களில் புத்த மதத்தைத் தழுவிய அயோத்தி தாசர், தலித் மக்களும் புத்த மதத்தைத் தழுவ வேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னையில் தலித் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வந்த ஜான்ரத்தினம் என்பவரது நட்பு கிடைத்து அவர் மூலம் ‘திராவிடப் பாண்டியன்’ எனும் இதழில் அயோத்திதாசர் பணி புரிந்தார். இது இவர் 1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ எனும் இதழை நடத்த இந்த அனுபவம் அவருக்குப் பெரிதும் உதவியது என அவர் குறிப்பிட்டுள்ளார். அடக்குமுறைகளுக்குக் காரணமான சாதிய அமைப்பைக் கண்டித்தார். ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘திருவள்ளுவர் வரலாறு’,‘புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி’ உட்பட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். வாழ்நாளின் இறுதிக் காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டார். இத்தகைய அரும்பாடு பட்ட அயோத்திதாசர், 1914 ஆம் ஆண்டில் தனது 69-வது அகவையில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…