இட்லி என்பது இந்தியர்களின் பாரம்பரியமான ஒரு உணவாக இருந்தாலும் இட்லியில் 65 செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. எப்படி இட்லியில் சுவையான 65 செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் தக்காளியை வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி பொடி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் மிளகாய் தூள் மற்றும் கடலை மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள இட்லியை துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி இந்த கடலை மாவும், மிளகாய் தூளும் கலந்த இட்லியை பொரித்து எடுக்கவும்.
அதன் பின் வேறொரு கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சீரகம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயத் துண்டுகள் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறை ஊற்றி கெட்டியான பதத்திற்கு வதக்கி எடுக்கவும். அதன்பின் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை அதில் போட்டு கிளறி விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் அட்டகாசமான இட்லி 65 வீட்டிலேயே தயார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…