‘நான் பாஜகவில் இணையவே இல்லை!’ – உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அதிரடி விளக்கம்!

- சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் பாஜகவில் இணைந்ததாக தகவல் +பரவி வந்தந்து.
- அதற்கு மறுப்பு தெரிவித்து நான் பாஜகவில் இணையவே இல்லை என மறுத்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கடந்த ஜூலை 6ஆம் தேதி சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதை அடுத்து அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என தகவல் வெளியாகி வந்தன.
இதனைஅடுத்து, முன்னாள் நீதிபதி ஜெயச்சந்திரன் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நான் கடந்த ஜூலை 6ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டேன். அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் ரமேஷ் ஜவடேகர் வந்திருந்தார். அவரிடம் சட்டத்திலுள்ள சில முக்கிய பிரச்சனை குறித்து பேச வந்திருந்தேன். அதற்காகத்தான் நான் கலந்துகொண்டேன். இது தவிர நான் பாஜக வில் இணைந்ததாக வரும் செய்திகள் போலியானது. நான் பாஜகவில் சேரவில்லை. அப்படி அக்கட்சி என்னை உறுப்பினர் பட்டியலில் சேர்த்திருந்தால் அதனை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என தனது தன்னிலை விளக்கத்தை அறிக்கை போல வெளியிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025