நான் ஒருவரை காதலித்தேன், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நிறைவேறவில்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அங்காடி தெரு, ரெட்டை சுழி, துங்கா நகரம், எங்கையும் எப்போதும், கோ, மங்காத்தா, கலகலப்பு போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து தற்போது தமிழில் யோகிபாபுவுடன் இணைந்து பூச்சாண்டி என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலி கூறியது ” நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்ததுதான் நடிக்கிறேன். இதில் சில படங்கள் வெற்றி பெறுகிறது சில படங்கள் தோல்வியடைந்தது. இது ஒரு இயல்பான விசியம். நான் தோல்வியை நினைந்து வருந்துவது இல்லை. மேலும் நான் காதலில் சிக்கி இருந்தேன் எனக்கு குழந்தைகள் உள்ளது என்றும் செய்திகள் பரவி வந்ததை நான் பார்த்தேன்.
நான் ஒருவரை காதலித்தேன், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நிறைவேறவில்லை. நான் என் அம்மாவுடன் ஹைதராபாத்தில் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்றும் நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…