கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் உள்ளது – டிரம்ப்!

கமலா ஹாரிசை விட அதிக இந்தியர்களின் ஆதரவு எனக்கு தான் இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்காவின் அனைத்து காவல் துறைகளையும் நெருக்கும் வகையிலான சட்டத்தை அவர் கொண்டு வருவார் என்றும், கமலா ஹாரிஸ் அவரை விட மோசமானவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் செனட்டர் எலிசபெத் வாரெனை போகோகோண்டோஸ் என குறிப்பிட்டு, அவரை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரை காட்டிலும் அதிக இந்தியர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025