நான் அதிரடியாக விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை -மோர்கன்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த 18-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு உலக கோப்பையில் 4 வெற்றியை ருசி பார்த்தது இங்கிலாந்து அணி. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 71 பந்துகளில் 4 பவுண்டரிகள் 17 சிக்சர் என 148 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார்.போட்டி முடிந்த பின்பு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் “இப்போட்டியில் இதுபோன்று அதிரடியாக விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை.
மேலும் அதிக சிக்சர் அடித்து உலக சாதனை படைத்தது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது. இப்போட்டி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025