இந்திய விமானப்படை தளபதி இஸ்ரேலுக்கு வருகை..!

இந்திய விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா நேற்று இஸ்ரேல் சென்றடைந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது. இஸ்ரேலில், ஆர்.கே.எஸ். பதாரியா மற்றும் அவரது இணை மேஜர் ஜெனரல் அமிகம் நோர்கின், இஸ்ரேல் விமானப்படை தளபதி ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்திய விமானப்படை ஒரு அறிக்கையில், ஆர்.கே.எஸ். பதாரியா இஸ்ரேலுக்குச் செல்வதற்கு முன், ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படை மற்றும் விமானப் பாதுகாப்பு (UAE AF & AD) தளபதி மேஜர் ஜெனரல் இப்ராகிம் நாசர் எம். அல் அலவியை சந்தித்தார். அப்போது இரு விமானப் படைகளுக்கிடையேயான வலுவான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கானஅளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025