பலமான பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா.!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் விற்பனையாகும் MPV (Multi Purpose Car) கார் சந்தையில் முன்னணியில் இருக்கிறது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta ). சவுகரியமான இடவசதி, சொகுசான பயணம், ஏனைய பாதுகாப்பு அம்சங்கள், விலை என அனைத்திலும் பயணர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த மாடலின் விலை உயர்ந்த வேரியண்ட்டான ZX -இல் அதிக பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்டீயரிங் வீல் கட்டுப்பாட்டை இழக்கும் சூழலை வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி பாதுகாப்பு அம்சம் தவிர்க்கும்படி அமைந்துள்ளது. அதேபோல, பின்னோக்கி நகர்வதை ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் மிகவும் அதிக பாதுகாப்பு வசதிகளை அளித்து வருகிறது.

மேலும், டியூவல் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் பிரேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல பாதுக்காப்பு வசதிகள் உள்ளன.

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் மட்டும் 7 ஏர்பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள், எமர்ஜென்சி பிரேக் சிக்னல், கிளாஸ் பிரெக் சென்சார் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்னோவா க்ரிஸ்ட்டா கார் G.O.A மாடல் மிக வலுவான கட்டுமானத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல் காரில் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு அமைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இவைகள் பிஎஸ்6 தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் எஞ்சின் 164BS பவரையும், 245nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 148 BS பவரையும், 343nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு என இரு வேறு வசதிகளில் கிடைக்கிறது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலானது நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. இந்த காரின் விலையானது ரூ.15.32 லட்சம் முதல் ரூ.23.0 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் ஆகும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

1 hour ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago