விவசாயிகளுக்கு ஆதரவளித்த பாப் பாடகி ரிஹானா முஸ்லிமா? கூகுளில் அதிகம் தேடப்பட்ட கீவேர்டு!

Default Image

விவசாயிகளுக்கு ஆதரவு தந்த பாப் பாடகி ரிஹானா ஐஎஸ் தீவிரவாதி என பேசப்பட்டதை அடுத்து இணையவாசிகள் அதிக அளவில் கடந்த சில மணி நேரத்தில் கூகுளில் ரிஹானா இஸ்லாமியரா என்பது குறித்துதான் தேடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே செல்லும் நிலையில் டெல்லி எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியரசு தினத்தனறு போராட்டம் கலவரமாக வெடித்தது. அதன்பின் பலரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வகையில் பேசி வந்த நிலையில், பிரபல பாப் பாடகி ரிஹானா அவர்களும் டுவிட்டரில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் ஏன் இன்னும் நாம் இதைக் குறித்து பேசவில்லை என்று பதிவிட்டு டெல்லியில் இணையதளம் முடக்கப்பட்ட இருப்பது பற்றி கூறியிருந்தார். இந்நிலையில் உடனடியாக இவர் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாளர் எனவேதான் இவ்வாறு பேசுகிறார் என அவரைப் பற்றி இணையதளத்தில் அதிகம் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து இவர் உண்மையிலேயே ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்க்காகத்தான் இவ்வாறு பேசுகிறாரா என்பதை குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இணையவாசிகள் கூகுளில் இவர் குறித்து தேடியுள்ளனர். அதில் கடந்த சில மணி நேரங்களில் மட்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கீவேர்டாக ரிஹானா முஸ்லிமா அவரது மாதம் என்ன என்பதுதான் இருக்கிறதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்