கண்டிப்பாக தமிழில் படம் பண்ணுவேன் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத் ராவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஷேர்ஷா என்ற பெயரில் படமாக எடுக்கிறார். இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வாணி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படம் நேரடியாக வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விஷ்ணு வரதனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் என்றால் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் என்று கூறலாம். அஜித்தின் ஸ்டைலிஸ் லுக்கில் அஜித் மிரட்டிருப்பர். அதைபோல் இசையமைப்பாளர் யுவன் அட்டகாசமான இசையை கொடுத்திருப்பார்.
மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ள நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் மீண்டும் அஜித்,யுவன், நிரவ் ஷா கம்போவை பார்க்கலாமா என்று கேட்டதற்கு விஷ்ணுவர்தன் ” கண்டிப்பாக நடக்கும் தமிழில் படம் பண்ணி 4 ஆண்டுக்களுக்கு மேல் ஆகிவிட்டது. கண்டிப்பாக தமிழில் படம் பண்ணுவேன். என் சகோதரர் யுவனை விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…