தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்ஃபிக்ஸ் இந்தியா என்ற ஓடிடி இணையத்தளத்தில் 6 மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டையே நானும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் நேரடியாக பிரபல ஓடிடி இணையத்தளமான நெட்ஃபிக்ஸில் இந்தியாவில் 6 மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…