அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி.! அவரே கூறிய பதில்.!

அட்லி தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பதாக கூறியதற்கு அவரே உண்மையான பதிலை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இவர் அடுத்ததாக அட்லி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க போவதாகவும், அதை அவரது உதவியாளரான ரவி இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, அட்லியை சமீபத்தில் நட்பு முறையில் சந்தித்ததாகவும், அப்போது அட்லி தனது உதவியாளர் ரவியிடம் எனக்கான கதை ஒன்று இருப்பதாக தெரிவித்தார். ஆனால் தற்போது உள்ள கொரோனா சூழல் காரணமாக கதை இன்னும் கேட்கவில்லை என்றும், அதனை அட்லி தான் தயாரிக்கிறாரா என்பது முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025